Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் கோயிலுக்கு வெள்ளி ... காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு துவக்கம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2018
11:11

ராமநாதபுரம்: தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பத்தாவது மரபு நடை நிகழ்ச்சியில் நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் பத்தாவது மரபு நடை நிகழ்வு நரிப்பையூர், வேம்பாரில் நடந்தது. ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமை வகித்து பேசியதாவது: குதிரைமொழி பகுதியில் எட்டுக்கைகளுடன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள உலகம்மன் (காளி) கோயில் உள்ளது. மேற்கூரை இல்லாத இக்கோயில் வெளிப்புறச் சுவர்களில் கி.பி.13 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் அழிந்தநிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு இக்கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கமுதி அருகிலுள்ள எருமைகுளம், கடலாடி அருகிலுள்ள ஆப்பனுார் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாற்பத்தெண்ணா மரப்படி, பூப்பலகை, நல்லுார்குளத்தில், ஆண்டபிரான், அழகிய பாண்டிய, செந்தாங்கி ஆகிய சொற்கள் இதில் காணப்படுகின்றன. அதேபோல் பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு பகுதியிலும் எட்டுக்கைகளையுடைய காளி கோயில் உள்ளது. கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இதை பிழைபொறுத்தம்மன் என்கிறார்கள். மதுரை ஐராவதநல்லுாரில் இதே சிலை போன்று அச்சு அசலாய் ஒரு சிலை உள்ளது. இரு சிலைகளும் மதுரையில் ஒரே இடத்தில் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். மதுரைக்கும், நரிப்பையூருக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது. பின்பு வேம்பாரில் உள்ள சர்ப்பமடம், மாலைக்கோயில், அழிந்துபோன சிவன் கோயில் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நரிப்பையூர் பற்றிய சிறு நுால் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வரலாற்றுச் சிறப்புகளை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar