பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
ஓசூர்: ஓசூர் ராஜகணபதி நகரில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வேதவித்ய விநாயகர், திருச்செந்தூர் முருகன், திருமலை திருப்பதி வெங்கடரமண சுவாமி,
தட்சிணமூர்த்தி மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் (நவம்., 17ல்) துவங்கியது.
அன்று காலை, 8:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், கலசஸ்தாபனம், கணபதி பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் கால பூஜை, மகா மங்களாரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று (நவம்., 18ல்) காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, சிறப்பு ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தன.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சொக்கலிங்கம், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.