பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் கோவிலில், மொபைல்போனில், செல்பி எடுக்க, தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
பிரதோஷம், திருவிழா மற்றும் சுப முகூர்த்த நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும். திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பலர், மொபைல்போனில், செல்பி எடுத்து தள்ளுவதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, செல்பி எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: கோவில் வளாகத்தில், செல்பி எடுக்கவும், அனுமதியின்றி புகைப்படம் எடுக்கவும், தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், மொபைல்போன் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.