பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
அவிநாசி: பொங்கலூரில், ஒரு லட்சம் குடும்பத்தினர் பங்கேற்கும் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடக்கிறது. அதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்த அவிநாசியில் மகாலட்சுமி ரத யாத்திரை, நேற்று (நவம்., 18ல்) நடந்தது.
அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், ரத யாத்திரை சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று(நவம்., 18ல்) துவங்கியது. பக்தர்கள், அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் ராம்குமார் பங்கேற்றனர்.
அதன்பின், காமராஜர் நகர், வாரியார் நகர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், நடுவச்சேரி உட்பட கிராமங்களுக்கு ரதம் சென்றது.
மாலை, கருவலூர் மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கி, வெள்ளியம்பாளையம், நம்பியம்பாளையம், ஆட்டையாம்பாளையம், புதுப்பாளையம், தெக்கலூர், கணியாம் பூண்டியில் கோமாதா பூஜையோடு நிறைவு பெற்றது.