வெள்ளகோவில்: வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம் நேற்று (நவம்., 18ல்) நடைபெற்றது.
ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் விநாயகர் சன்னதியிலிருந்து, பன்னிரு திருமுறை, பூக்களுடன் , பக்தர்கள், சோழீஸ்வர சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு சென்றனர்.
பெருமாள் கோவிலில் இருந்து மணமகள் அழைப்புடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.