திருப்பூரில், ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம்:பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2018 02:11
திருப்பூர்:திருப்பூரில், நேற்று (நவம்.,18ல்) சிறப்பு ஸ்ரீராம நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்கள் ஸ்ரீராம நாமத்தை பாராயணம் செய்தனர்.
திருப்பூர், கோர்ட் வீதியில், ஸ்ரீனிவாசபுரம் ராமபஜனை மடத்தில், நேற்று (நவம்., 18ல்) சிறப்பு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, ஸ்ரீ சீதாராமர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரானை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, சுந்தர் மற்றும் அவரது குழுவினர் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் இசைத்தனர். தொடர்ந்து பக்தர்கள், ஸ்ரீராம நாமத்தை பாராயணம் செய்தனர். இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, ஸ்ரீ சீதாராமருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.