பதிவு செய்த நாள்
19
நவ
2018
03:11
சென்னை : ராமானுஜருக்கு, ஐதராபாதில், 216 அடி உயரத்தில் சிலை அமைப்பது குறித்து, சென்னையில் நேற்று (நவம்., 18ல்) கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
ராமானுஜர், 1,000வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத், சம்ஷாபாத்தில், ஜீயர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர், திரிதண்டி ஸ்ரீமண் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சார்பில், 216
அடி உயரத்தில், ராமானுஜருக்கு சிலை அமைக்க உள்ளது.இதற்கு, சமத்துவத்தின் சிலை என, பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த சிலை அமைப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம், தி.நகர்,
வாணிமஹாலில், நேற்று (நவம்., 18ல்) மதியம் நடந்தது.