பதிவு செய்த நாள்
21
நவ
2018
02:11
தர்மபுரி : பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று (நவம்., 20ல்), சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடந்தது.
வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, மாலை, 5:00 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர்
கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உட்பட, பல்வேறு சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.