பதிவு செய்த நாள்
15
பிப்
2012
11:02
காங்கேயம்: காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று தீர்த்தவாரி நடந்தது. காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தைப்பூசத்திருவிழா, ஜன., 29ம் தேதி, மலையடிவாரம் வீரமாத்தியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி மலைக்கோவிலில் கொடியேற்றப்பட்டது. அன்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியஸ்வாமி, மலையடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். பிப்., 6ம் தேதி திருக்கல்யாண விழா, 7ம் தேதி மாலை தேரோட்டம் நடந்தது. 9ம் தேதி மாலை தேர் நிலையம் சேர்ந்தது. 12ம் தேதி பரிவேட்டை, தெப்ப உற்சவ விழா நடந்தது. நேற்று பகல் மஹாதரிசன விழா நடந்தது. சடாச்சர ஜெபம், திருமுறைபாராயணம், சோடச உபசார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று தீர்த்தவாரி விழா நடந்தது. பகல் 12 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக வீதியுலா நடந்தது. 16ம் தேதி, காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஸ்வாமி மலைக்கு எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.