பதிவு செய்த நாள்
23
நவ
2018
03:11
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று (நவம்., 22ல்)உண்டியல் திறக்கப் பட்டது. இதில், காணிக்கையாக, 30 லட்சத்து, 31 ஆயிரத்து, 763 ரூபாய் வசூலாகியது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல் மற்றும், 22 நிரந்தர பொது உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், பொள்ளாச்சி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் மல்லிகா, கண்காணிப் பாளர் தமிழ்வாணன் முன்னிலையில், காணிக்கைகள் எண்ணப்பட்டன.ஒன்பது தட்டு காணிக்கை உண்டியலில், ஏழு லட்சத்து, 13 ஆயிரத்து, 179 ரூபாய்; 22 நிரந்தர உண்டியலில், 23 லட்சத்து, 18 ஆயிரத்து, 584 ரூபாய் என மொத்தம், 30 லட்சத்து, 31 ஆயிரத்து, 763 ரூபாய் வசூலானது.மொத்தம், 143 கிராம் தங்கமும், 355 கிராம் வெள்ளியும் இருந்தது. கோவில் பணியாளர்கள், பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.