திருவனந்தபுரம்: கேரள கவர்னர் சதாசிவத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று 22 ல் மாலை சந்தித்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் புகார் குறித்து கவர்னரிடம் விளக்கமளித்ததாக தெரிகிறது.
சபரிமலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் சதாசிவத்திடம் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டன.மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் வந்த போது அவரது காரை தடுத்தது பற்றி பா.ஜ.,வும் கவர்னரிடம் புகார் கொடுத் திருந்தது.
இந்நிலையில் நேற்று 22ல் மாலை கவர்னரை, பினராயி விஜயன் சந்தித்தார். 144 தடை உத்தரவை திரும்ப பெறுதல், சபரிமலை போலீசார் மீதான புகார்கள், பம்பை மற்றும் சன்னிதானத்தில் குடிநீர், கழிப்பறை பிரச்னை, நிலக்கல்லில் இருந்து கூடுதல் நேரம் பஸ் இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு வழக்கமானதுதான் என்று முதல்வர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.