புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் மர தங்கத்தேர் உற்சவ விழா நேற்று நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை நுாற்றாண்டு பழமை வாய்ந்த ‘மர தங்கத்தேர்’ உற்சவம் நடைபெறுவது வழக்கம், அதன்படி, இந்தாண்டிற்கான மரதங்கத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதைதொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியுடன், விநாயகர் சன்னதி புறப்பாடும், இரவு 8 மணிக்கு மணக்குள விநாயகர் மர தங்கத்தேரில் உற்சவம் நடந்தது. புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலம் சென்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிவெங்கடேசன் செய்திருந்தார்.