பழநி : பழநி மலையடிவாரத்தில் உள்ள அம்மன் கோயிலில் கோபுரகலசம் திருட்டு போனது. பழநி முருகன் கோயில் கிரிவல பாதையில் உள்ளது அழகுநாச்சியம்மன் கோயில். இங்குள்ள கோபுர கலசம் மற்றும் மின் தளவாட சாமான்கள் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.