வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2018 12:11
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது. கார்த்திகை மாதத்தில் சக்கரத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை 7:15மணிக்கு புண்யாஹவாசஜனம், லட்சுமி நரசிம்ம சுதர்சன ேஹாமம் நடந்து பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி புனித கலச நீர் ஊற்றி வீர ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.