பதிவு செய்த நாள்
28
நவ
2018
01:11
கோத்தகிரி: கோத்தகிரி நாரகிரி மாதேஸ்வரா சுவாமி சிவன் கோவில் திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜை வேதி கார்ச்சனை, பண்டபார்ச்சனை, 108 திராவியாகுதி, நாடி சந்தானம், மகா பூர்ணகுதி, யாத்ராதானம் மற்றும் கடம் புறம்பாடு பூஜையை தொடர்ந்து, கன்னேரிமுக்கு சந்தான வேணுகோபால் திருக்கோவில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம்ம் நடந்தது.
விழாவில், நாரகிரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ஐயனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மடியா கவுடர், காரியதரிசி காமன் ஆகியோர் முன்னிலையில், கோவில் கமிட்டியினர், சிவசக்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.