பதிவு செய்த நாள்
28
நவ
2018
01:11
அந்தியூர்: பொங்கலூரில், சோடஷ மகாலட்சுமி மகாயாகம், கஜபூஜை, 108 அஸ்வமேத யாகம், 1,008 கோமாதா பூஜை, ஒரு லட்சத்து எட்டு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அடுத்த மாதம் 24, 25, மற்றும் 26ல், நடக்கிறது. இதற்கு, 400 அடி நீளம், 80 அடி அகலம், நான்கு அடி உயரத்தில், பிரம்மாண்ட யாக குண்ட மேடை அமைக்க, மக்களிடமிருந்து பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
இதற்காக, பல்வேறு மாவட்டங்களில், மகாலட்சுமி ரத யாத்திரை, நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரதம், நேற்று முன்தினம் (நவம்., 26ல்) நள்ளிரவு, அத்தாணி பகுதிக்கு வந்தது. இதை, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பார்த்து வழிபட்டனர். நேற்று (நவம்., 27ல்) காலை அத்தாணியில் இருந்து புறப்பட்டு, மாலை அந்தியூர் பகுதிக்கு வந்தது. பின், அங்கிருந்து இன்று வெள்ளித்திருப்பூர், அம்மாபேட்டை, பர்கூர் மற்றும் சத்திய மங்கலம் செல்ல உள்ளது. யாத்திரையின் போது, மக்களிடம் இருந்து பசு நெய் சேகரிக்கப்பட்டது.