நெல்லிக்குப்பம் காலபைரவர் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2018 01:12
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகமும், பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, கால பைரவர் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் வீதியுலாவும் நடந்தது.