கிருஷ்ணகிரி குண்டிமாரியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2018 01:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி மேல்புதூர் குண்டிமாரியம்மன் கோவில், இரண்டாம் ஆண்டு விழா நேற்று (நவம்., 30ல்) நடந்தது. இதையொட்டி காலை, 4:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிலை வைத்து, இரண்டாமாண்டு பிறப்பையொட்டி கேக் வெட்டி, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.