உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2018 11:12
உடுமலை : கார்த்திகை சோமவாரத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது.
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சங்காபிஷேக விழா நடந்தது. கார்த்திகை மாத திங்கள்கிழமையையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேக விழா காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கலசபூஜை மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. 108 வலம்புரி சங்குகள், அபிஷேகத்திற்காக சூலம் வடிவில் அலங்காரம் செய்து, சங்காபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.