பதிவு செய்த நாள்
03
டிச
2018
11:12
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலில் 4மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசன் காரணமாக, பழநிமுருகன் மலைக் கோயிலுக்கு சனி, ஞாயிறு தினங்களில் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மேலும் பக்தர்கள் வருகை அதிகரித்தது. காலையில் பால்குடங்கள், காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். பொது தரிசன வழியில் நான்கு மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏராளமான வாகனங்கள் வந்ததாலும், தடைசெய்யப்பட்ட இடங்களில் நிறுத்தியதால், பாதவிநயாகர்கோயில், பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறைநாட்களில் கூடுதலாக போலீசாரை நியமிக்க மாவட்ட எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.