திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான சொக்க நாதர் கோயிலில் காசுகார செட்டியார்கள் சங்கம் சார்பில் நேற்று (டிசம்.,2ல்) சிறப்பு பூஜை நடந்தது. மூலவர்கள் சொக்கநாதர் மீனாட்சி அம்மன், நெல்லிமர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தன. சொக்கநாதர், மீனாட்சிக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது