பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச சக்திமாலை இருமுடி விழா, நாளை (டிசம்., 5ல்) துவங்குகிறது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டு தோறும், தைப்பூச ஜோதி விழாவையொட்டி, சக்தி மாலை இருமுடி அணிந்து வந்து, ஆதிபராசக்தி அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.இந்த ஆண்டு, தைப்பூச சக்திமாலை இருமுடி விழா, நாளை 5ம் தேதி துவங்கி, ஜன., 20ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க நாளன்று, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகத்துடன், தைப்பூச சக்திமாலை இருமுடி விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார்.விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி சித்தர் பீடம் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்கின்றனர்.சென்னை - தென் மாவட்டங்கள் இரு மார்க்கத்திலும் செல்லும், 29 விரைவு ரயில்கள், மேல்மருவத்தூரில் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.