பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
திருத்தணி: சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று (டிசம்., 3ல்) லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருத்தணி, பழைய தர்மராஜா கோவிலில், கார்த்திகை மாத திங்கட்கிழமையொட்டி, லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று(டிசம்., 3ல்) நடந்தது. இதையொட்டி, காலை மற்றும் மாலை என, இரண்டு வேலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.