கன்னியாகுமரியில் திருப்பதி கோவில்: ஜனவரி 27ல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2018 01:12
திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாள் கோவில் நிர்வாகமானது தனது கோவில் கிளைகளை நாடு முழுவதும் திறப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. சென்னை திநகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் திருப்பதி பெருமாள் கோவிலின் கிளைகள் திறந்து செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வந்த பெருமாள் கோவில் ஜனவரி 27ம்தேதி மகா கும்பாபிஷேகத்துடன் திறக்கப்படும் என கோவில் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் திருமலையில் தெரிவித்தார். கோவில் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுவாமிக்கு அன்றாடம் தேவைப்படும் வஸ்திரங்கள் எல்லாம் இப்போது இருந்து எடுத்து வைக்கப்பட்டு வருகிறது மேலும் பூஜைக்கு தேவைப்படும் மலர்கள் கோவிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து அதில் இருந்து பறித்துக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.