பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
ஆத்தூர்: கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் நேற்று (டிசம்., 3ல்), 60வது ஆண்டு, மூன்றாவது சோமவார, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. கோவில் மகா மண்டபத்தில், லிங்க வடிவத்தில் வலம்புரி சங்கு களை வைத்து, தீர்த்தம் நிரப்பி, பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள், திருமுறை, பெரியபுராணம் பாராயணம் செய்து, சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தினர். சங்கு பூஜை நிகழ்வை தொடர்ந்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கைலாசநாதர், காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.