பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
ஈரோடு: மூன்றாவது வாரமாக, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ருத்ரயாகம் நடந்தது. கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில், அனைத்து சிவாலயங்களிலும், ருத்ரயாகம் நடக்கிறது. இதன்படி, ஈரோடு கோட்டை வருணாம்பிகை சமேத, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், மூன்றாம் வாரமாக, கார்த்திகை சோமவார ருத்ரயாகம், நேற்று (டிசம்., 3ல்) நடந்தது. உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, கல்வி, கேள்வி ஞானத்தில், குழந்தைகள் சிறந்து விளங்கவும், முன்னோர் சாபம் நீங்கவும் இந்த யாகம் நடந்தது. யாகத்தில், 108 மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர். இரவு வரை நடந்த யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கொடுமுடி சங்கமேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை ஒட்டி, 1,008 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி, நர்மதா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஏழு நதிகளின் தீர்த்தம் எடுத்து வந்து, அபிஷேகம், மகா ஹோமம் நடந்தது.