பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும், மலைப்பாதை யின், ஒன்பது கொண்டை ஊசி வளைவுகளில், மின் விளக்கு வசதியின்றி, பக்கர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னிமலையில், மலை மீதுள்ள, முருகப்பெருமான் சன்னதிக்கு, தார்ச்சாலை வழியாக செல்ல, தினமும் அதிகாலை, 5:30 மணிக்கும், திருவிழா மற்றும் பிரதி செவ்வாய்கிழமைக ளில், அதிகாலை, 4:30 மணிக்கும், கேட் திறக்கப்படுகிறது. 4 கி.மீ., தூரமும், ஒன்பது கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட, மலைப்பாதையில், தினமும், இரவு, 8:00 மணி பூஜை முடிந்து, 9:00 மணி வரை, வாகனங்கள் மலைப் பாதையில் இறங்கலாம். செவ்வாய்கிழமை, திருமணம், திருவிழா நாட்களில், இரு சக்கர வாகனம், கார், வேன் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள், அதிகாலையில் மலைப்பாதையில் செல்கின்றன. அதிகாலை நேரம், மலைப் பாதையில் இருட்டாக இருப்பதால், முயல்கள், கீரிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. திடீரென வரும், வாகனங்களின் வெளிச்சத்தால், தடுமாறும் முயல்கள் வாகனத்தில் அடிபடுகின்றன. மலைப்பாதையில் மின் விளக்குகள் அமைத்து, பக்தர்கள், பயமின்றி, பயணம் செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.