நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் அன்னை அறக்கட்டளை, கணித மன்றம் சார்பில் ராமானுஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கணித மன்றத் தலைவர் பிச்சைநாதன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குநர் காசிமாயன் வரவேற்றார். டாக்டர் செல்வராஜ், பாலச்சந்திரன், சட்ட ஆலோசகர் செல்லப் பாண்டியன் பேசினர். கவிஞர் சோமசுந்தரம், தலைமை ஆசிரியர்கள் நடராஜன், மதிவாணன், தியாகராஜன், நர்மதா வாழ்த்தினர்.கணித மன்றம் சார்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முசுவனூத்து அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர். கல்லூரி மாணவி பிரதாயினி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.