பதிவு செய்த நாள்
07
டிச
2018
01:12
கரூர்: கரூர், மேட்டு தெருவிலுள்ள அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதேபோல், இந்தாண்டும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு நடந்து வருகிறது.
நாளை, திருவாய்மொழித்திருநாள் ராப்பத்து விழா துவங்குகிறது. தினமும், நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 17ல், மோகினி அலங்காரம், 18ல், காலை, 5:30 மணியளவில் பரமபதவாசல் வழியாக, நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
18லிருந்து ராப்பத்து விழா துவங்கி, 27 ஆழ்வார்மோட்சம், 28ல், ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, திருச்சி இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர்கள் சூரிய நாராயணன், சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.