பதிவு செய்த நாள்
07
டிச
2018
01:12
தர்மபுரி: அமாவாசையையொட்டி, தர்மபுரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி அடுத்த, தொப்பூர் கணவாய், மன்றோகுளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு, பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், தொப்பூரை சுற்றியுள்ள மக்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனை வருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி எஸ்.வி.,ரோடு
அபயஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.