திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்ஸவம் துவங்கியது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி 21 நாட்கள் நடக்கும். நேற்று முன்தினம் பகல்பத்து உற்ஸவம் துவங்கியது. மாலையில் ஆண்டாள் சன்னதி அருகே யாகசாலை பூஜைகள் நடந்தன. உற்ஸவ பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் காப்புக்கட்டி விழா துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் சன்னதி எழுந்தருளி ஆழ்வார்களுக்கு அருள்பாலித்தல், மாலையில் சன்னதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். டிச.,17 ல் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும். டிச.,18ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பும், மறுநாள் ராப்பத்து உற்சவம் துவங்கும்.