திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 02:12
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு தீபராதனைகள் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவாரம், திருவாசகம் பக்தி பாடல்களை பக்தர்கள் பாடினர்.