நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே தொட்டம்மாள் கோவிலில் சுயம்வர மகா ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 02:12
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள பூச்சியூரில், வீரபத்திரசாமி, தொட்டம்மாள் கோவிலில் சுயம்வர மகா ஹோமம் நடந்தது.அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
விழாவையொட்டி குல பெரியவர்கள் பெண்களை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று அருள்மிகு வீரபத்திரசாமி, தொட்டம்மாளை வழிபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.