ஏமகண்டனூரில் பொங்கல் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2018 03:12
கொடுமுடி: கொடுமுடி அருகே நடந்த, பொங்கல் விழாவில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி வட்டாரம், ஏமகண்டனூரில் மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 2ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பூக்குண்டம் இறங்குதலும், நேற்று காலை அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், விமான அலகு மற்றும் முதுகில் அலகு குத்தி, காவிரியாற்றில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைதொடர்ந்து, கிடா வெட்டுதல் மற்றும் பொங்கல் நிகழ்ச்சியும், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.