பதிவு செய்த நாள்
13
டிச
2018
03:12
இடைப்பாடி: கணபதி, செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம், மக்கள் வெள்ளத்தில், கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கல்லபாளையத்திலுள்ள, கணபதி, செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த, ஆறுகால பூஜையின் இறுதியாக, ஹரித்துவார், ரிஷிகேஷ், அலகாபாத், திரிவேணி சங்கமம், கோதாவரி, காவிரி நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு ஊற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர் மூலம், கோபுர கலசங்கள் மீது பூக்கள் தூவப்பட்டன. தொடர்ந்து, திரண்டிருந்த பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.