சென்னிமலை: சென்னிமலை சித்தர்கள் பீடம் சார்பில், உலக நன்மை, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்கவும், வியாபாரம் மற்றும் விவசாயம் செழிக்கவும், குருபூஜை விழா நேற்று தொடங்கியது. சரவணானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், வியாழக்கிழமை தோறும், காலை, 9:00 மணிக்கு, 48 வாரங்களுக்கு நடக்கும். மஹா மண்டல குபேர யாக வேள்வி பெயரில் நடக்கும், இப்பூஜையில் ஆன்மிக சான்றோர்கள் பலர் பங்கேற்கின்றனர். 48 வாரங்களுக்கு நடக்குமென்று, சரவணானந்த சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.