Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிசம்பர் 16 முதல் ஜனவரி 6 வரை 29வது ... புஷ்பவனேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவில் கல்கருட சேவை: ஏராளமானோர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவில் கல்கருட சேவை: ஏராளமானோர் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 டிச
2018
11:12

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கல்கருட சேவை நடந்தது.

108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து  விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.  மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபம் எழுந்தருளியோது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கருடசேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர். இதையடுத்து எட்டாம் நாள் விழாவான் வரும் 18-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும், அதனைத் தொடர்ந்து வெண்ணைத்தாழி அலங்காரமும்,  19-ம் தேதி  தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar