பதிவு செய்த நாள்
15
டிச
2018
12:12
பழநி: மார்கழி பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோவில், நாளை, டிச.,16 முதல், 2019 ஜன.,22 வரை, தினமும் அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பழநிமுருகன் கோவிலுக்கு, மார்கழி முதல் நாள், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்குவர். தைப்பூசத்திற்கு முன்னதாகவும், பின்னரும், பாதயாத்திரையாக, பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர்.தனுர்மாத பூஜைக்காக, மார்கழி முழுவதும், பழநி மலைக்கோவில், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். நாளை காலையில் நடை திறந்த பின், 4:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பின், ஆனந்த விநாயகர் சன்னிதியில் யாகபூஜைகள் செய்து, விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி வழிபாடு நடக்கிறது.தை மாதப் பிறப்பு, பொங்கல் அன்று, தைப்பூசவிழா துவங்குவதால், தொடர்ந்து எட்டு நாட்களுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தினமும் ஆறுகால பூஜையில், முருகர், சாது, வேடர், பாலசுப்ரமணியர், வைதீகாள், ராஜஅலங்காரம், புஸ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.