திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று 16 ல்,ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு காலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.காலையிலேயே கோவிலில் குவிந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.