பதிவு செய்த நாள்
17
டிச
2018
02:12
மாமல்லபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பக்தர்கள், சுற்றுலாவிற்காக, மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.
மேல்மருவத்தூர், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநில பக்தர்களும் வருகின்றனர்.கோவிலில், சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, பக்தர்கள் குவிகின்றனர். இவர்கள், மாமல்லபுரம் கடலில் நீராடிய பின், மேல்மருவத்தூர் கோவிலில் வழிபடுவர்.தற்போது, மேல்மருவத்தூரில் வழிபட, பல்வேறு பகுதிகளிலிருந்து, மாமல்லபுரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.செவ்வாடை பக்தர்களால், அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டுகிறது.