பதிவு செய்த நாள்
17
டிச
2018
02:12
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.முன்னதாக நேற்று முன்தினம் (டிசம்., 16ல்) காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது, மாலை 6:00 மணிக்கு வாழை மட்டையில் செய்யப்பட்ட சிறப்பு குடிலில் அய்யப்பன் எழுந்தருளி திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.நேற்று (டிசம்., 16ல்) காலை தென்பெண்ணை யில் இருந்து தீர்த்த கலசங்கள் வானவேடிக்கையுடன் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட்டது. 10:30 மணிக்கு, கலச பூஜைகள், கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சாஸ்தா ஹோமம், விசேஷதிரவியாகுதி, மகாபூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு, திருவாபரணம் பெட்டி பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சோடோபசார தீபாராதனை நடந்தது.