பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாள் மண்டல பூஜை, கோவில் வளாகத்தில் நேற்று (டிசம்., 16ல்) நடந்தது. குளித்தலை அடுத்த, கருப்பத்தூரில், ஐயப்பன் கோவில் உள்ளது.
இக்கோவில் சில மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு, கடந்த அக்., 28ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், மண்டல பூஜை துவங்கியது. நேற்று (டிசம்., 16ல்) 48வது நாள் மண்டல பூஜை பூர்த்தியானது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், 108 மூலிகைகள் கொண்டு யாக வேள்வி பூஜை, சிறப்பு ஹோமம் பூஜை மற்றும் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அறக்கட்டளை தலைவர் சுந்தரேசன், செயலாளர் லட்சுமிநரசிம்மன், திருப்பணிக்குழுத் தலைவர் சிவசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.