பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ள சிவ - விஷ்ணு கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், ஜலநாராயணி தாயார் சமேத ஜலநாராயண பெருமாளுக்கு, வைகுண்ட ஏகாதசி விழா நாளை (டிசம்., 18ல்)நடக்கிறது.
இதையொட்டி, இன்று (டிசம்., 17ல்), காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேக பூஜை ஹோமம் மற்றும் மாலை, 4:30 மணி அளவில், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேமும் நடைபெறு கிறது.நாளை, அதிகாலை, 4:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு (பரமபத வாசல்) நடைபெற்று, ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் உற்சவர் ஜலநாராயண பெருமாள் சன்னதியில், கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.இதே போல், திருவள்ளூர் வீரராகவர் கோவில், என்.ஜி.ஓ., காலனி சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும், சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.