திருவந்திபுரத்தில் நாளை 18ம்தேதி சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 04:12
கடலூர்:திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை 18ம் தேதி காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பெருமாளுக்கு எதிர்சேவையில் தேசிகர் காட்சியளிக்கிறார். மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நாளை முதல், ராபத்து உற்சவம் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணி்க்கு உற்சவர் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.இதேப் போன்று, புதுப்பாளையம் செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலிலும், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலிலும் நாளை காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
* அன்னூர்:அன்னூர் பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்னூர் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (18ம் தேதி) அதிகாலை 3:30 மணிக்கு அபிஷேக ஆராதனை, 4:30 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது.காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. காலை 6:30 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பஜனை துவங்கி, 19ம் தேதி அதிகாலை வரை நடக்கிறது.