பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
பொங்கலூர்:பொங்கலூர், பயணியர் தில்லை நகரில் நடக்கவுள்ள சோடஷ மகாலட்சுமி யாக பெருவிழாவுக்கு, ஹோம அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்து முன்னணி சார்பில், வரும், 23 முதல், 25ம் தேதி வரை மூன்று நாட்கள், சோடஷ மகா லட்சுமி மகா யாகம் நடக்கிறது. இதில், கஜ பூஜை, 108, அஸ்வ பூஜை, 1,008கோ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் திருக்கல்யாணம் மற்றும் ஒரு லட்சம் தம்பதியர் கலந்து கொள்ளும் மகா லட்சுமி மகா யாகம் நடக்கிறது.
இதற்காக யாகம் நடக்கும் இடத்தில், மகாலட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட, நாள் தோறும், பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.யாக சாலை, 360, அடி நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
யாக குண்டத்துக்கு தற்போது வர்ணம் தீட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யாகசாலை வளாகத்தை, நேற்று (டிசம்., 16ல்)காலை, பெண்கள் சாணம் மொழுகி சுத்தப் படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
யாகம் நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், 250, மொபைல் டாய்லெட் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.குடிநீர் வசதி, 300 ஏக்கரில் பார்க்கிங் வசதி, பார்க்கிங் இடத்தில் இருந்து, யாக சாலைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி, யாக நிகழ்ச்சியை காண, 15 இடங்களில் எல்.இ.டி., டிவி வசதி செய்யப்பட்டுள்ளது.