பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
பல்லடம்:பல்லடம் ஜயப்பன் கோவிலில் சங்காபிஷேக விழா (டிசம்., 16ல்)நேற்று நடந்தது. ஐம்பொன் யானை வாகனத்தில் எழுந்தருளி, ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில், ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்ட யானை வாகனத்தில், ஐயப்பன் ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில், ஐயப்பன் எழுந்தருளினார். செண்டை மேளம் முழங்க, என்.ஜி.ஆர்.,ரோடு, திருச்சி ரோடு, கொசவம்பாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு வழியாக, ஐயப்பன், திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழியெங்கும், பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஐயப்பனை வழிபட்டனர்.