பணத்தட்டுப்பாட்டால் சிரமப் படுபவர்கள் பங்குனி வளர்பிறையில் வரும் ஆமலகா ஏகாதசி விரதமிருக்கலாம். ’ஆமலா’ என்றால் நெல்லிக்காய். எல்லாத் தெய்வங்களும் காமதேனு என்னும் தெய்வப்பசுவில் அடங்கியிருப்பது போல, நெல்லிமரத்தில் எல்லா அருட்சக்திகளும் அடங்கியுள்ளன. ஒருமுறை நெல்லிக்கனி ஒன்றை தானம் அளித்த பெண்ணின் வறுமையைப் போக்க விரும்பினார் ஆதிசங்கரர். இதற்காக கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடவே பொன்மழை பொழிந்தாள் மகாலட்சுமி. ’கனகம்’ என்றால் ’தங்கம்’. ’தாரா’ என்றால் ’பொழிதல்’. பணம் மட்டுமின்றி திருமணம், மகப்பேறு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கவும் இந்த விரதம் மேற்கொள்வர்.