பதிவு செய்த நாள்
20
பிப்
2012
11:02
மனித வாழ்க்கையில் மன மகிழ்வோடு வாழ்வதற்கு இறைவழிபாடு உதவுகின்றது. ஒவ்வொரு நாளும், மணியும், நிமிடமும் மனிதனுக்கு பல மாற்றங்களை தருகின்றது. எனவே தான் நம் முன்னேறார்கள் பலவிதமான விரதங்களை பின்பற்ற கூறினார்கள். நாள்தோறும் பின்பற்ற வேண்டிய விரதங்கள், அவற்றால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விரிவாக கூறியுள்ளனர். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விரதங்களை அவர்கள் வற்புத்தியுள்ளார்கள். இவ்விரதங்களின் பலன்கள், அவற்றினால் ஏற்படும் தோஷ நிவர்த்திகள், இவற்றை பின்பற்றும் முறைகள் ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.
சிவனுக்குரிய விரத நாட்கள்: கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் ஆரம்பித்து பின் தொடர்ந்து வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருக்கலாம். மார்கழி திருவாதிரை நாளில் விரதம் மேற்கெண்டு பின் மாதந்தோறும் வரும் திருவாதிரை நாளில் விரதம் இருப்பது உமா மகேஸ்வர விரதம் ஆகும். கார்த்திகை மாதம் பவுர்ணமியில் ஆரம்பித்து பின் வரும் எல்லா நாட்களிலும் விரதம் இருக்கலாம். மாசி தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தொடங்கி ஒவ்வொரு மாத சிவராத்தியிலும் மேற்கொள்வது தோஸ்வர விரதம் ஆகும். புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசை வரை விரதம் இருக்கலாம். தை சதுர்த்தியில் பாசுபத விரதமிருக்கலாம். வைகாசி வளர்பிறை அஷ்டமி விரதம் இருப்பது உள்ளிட்டவை சிவனுக்கு உரிய முக்கிய விரதங்களாக கருதப்பட்டு கடைபிடித்து வந்த போதிலும் சிவராத்திரி விரதம் மிக பிரமாதமானது. சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம், அதிலும் சிறந்தது சோமவாரம், சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். ஜாதகத்தில் சந்திரதோஷம் உள்ளவர்கள் இவ்விரதம் இருந்தால் தோஷம் நீங்கும். சந்திர திசை நடக்கும் 10 ஆண்டுகளும் சோமவார விரதம் இருப்பது நல்லது. சிவன் கோயில்களுக்கு சென்று செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று கீழ்க்கண்ட ஸ்தோத்திரங்களை பாட வேண்டும்.
அலைகடல் தனினின்று
அன்று வந்து துதித்த போது
கலைவளர் திங்களாகி
கடவுளறெவரும் ஏந்தும்
சிலை நதல் உளம்பாள்
பங்கள் செஞ்சடை பிறையாயாகும்
மலைவலமாக வந்த மதியமே
போற்றி! போற்றி!
என மந்திரங்கள் கூறி சந்திரனுக்கு உகந்த பச்சரிசியை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். சந்திரதோஷம் உள்ளவர்கள் நல்முத்தை மோதிரத்தில் செய்து அணிந்தால் நன்மை கிடைக்கும். இவ்விரதம் இருப்பவர்களுக்கு நன்மை கிட்டும். மகா சிவராத்திரி உங்கள் வாழ்வில் மகத்தான சிவராத்திரியாக வேண்டுமென்றால் கண் விழித்து சிவவழிபாடு செய்து விரதமிருந்தால் பக்தியை நாடிய அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.