பதிவு செய்த நாள்
21
டிச
2018
11:12
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், இறைவன்
மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தேர்த்திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலையில், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா, முக்கிய வீதிகள் வழியாக, 19ம் தேதி வரை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அவிநாசி, வாகிசர்மடம், காமாட்சி தாச ஏகாம்பரநாத சாமிகள், காரமடை, அருணை அருள்முருக அடிகள், கட்டளை தாரர்கள், திருமுருகன்அருள்நெறிக்கழகத்தினர் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரில் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். வழியில் பக்தர்கள் தேர் மீது பழங்களை வீசிவழிபட்டனர். தர்மர் கோவில்வீதி, சத்திரோடு, மெயின் ரோடு, வழியாக ஓதிமலை ரோடு சென்று, மாலை 5:15 மணிக்கு கோவிலை அடைந்தது. அன்னுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில், பல்வேறு அமை ப்பினரும், பக்தர்களும், அன்னதானம் வழங்கினர். வாண வேடிக்கை நடந்தது. இன்று மாலை குதிரை வாகனத்தில்,
சுவாமி திருவீதியுலா நடக்கிறது. 22ம் தேதி மாலை 6:30 மணிக்கு தெப்போற்சவம் நடக்கிறது. பல ஆயிரம் பக்தர்கள் பரவசம் அன்னுார் மன்னீஸ்வரர் கோ வில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.