பதிவு செய்த நாள்
21
டிச
2018
11:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டபத்தில் 12 ஜோதிர்லிங்க கோயில் போல் தத்ரூபமாக அமைத்து பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. ராமேஸ்வரம் உண்டியல் குடத்தெருவில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டபம் புதிய கட்டடத்தை ராமேஸ்வரம் கோயில் தக்கார் குமரன்சேதுபதி திறந்து வைத்தார். இம்மண்டபத்தில் ராமேஸ்வரம், கேதார்நாத், காசி, ஜார்கண்ட், மகராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க தலங்களின் சிவலிங்கங்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் சொர்க்கத்தில் லட்சுமி, நாராயணர், தேவதைகள் உள்ள தத்ரூப சிலைகளை வடிவமைத்தும், 3டி திரையில் தியானம் விளக்க படமும் அமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள், பக்தர்கள் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் இலவசமாக கண்டு தரிசிக்கலாம். இங்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரையும், மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரையிலும் பொதுமக்கள் தியானம் கற்றுக் கொள்ளலாம். இவ்விழாவில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டபம் நிர்வாகி யோகினி, மதுரை மண்டல இயக்குனர் மீனாட்சி, தமிழக நிர்வாகிகள் கலாவதி, பீனா, ராமேஸ்வரம் தியான மண்டபம் பொறுப்பாளர் வி.கே.ராதிகாசவுத்திரி உள்பட பலர் பங்கேற்றனர்.